பிரபல நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டருக்கு இவ்வளவு பெரிய குழந்தைகளா! வெளிநாட்டில் கொண்டாட்டம்

தமிழ் சினிமாவில் முக்கியமான நடன இயக்குனர்களில் ஒருவர் பிருந்தா மாஸ்டர். சூர்யா நடித்த காக்க காக்க, வாரணம் ஆயிரம் படங்களில் தொடர்ந்து, விஜய்யுடன் மதுர, சிவகார்த்திகேயனுடன் மான் கராத்தே, கடல், PK, தெறி என பல படங்களில் பணியாற்றியுள்ளார்.

1995 ல் வந்த நம்மவர் படத்திலும் நடித்துள்ளார். ஜெயந்தி மாஸ்டர், கலா மாஸ்டர் ஆகியோர் இவரின் சகோதரிகள். நடிகர் சாந்தனு பாக்யராஜின் மனைவி கீர்த்திக்கும், காயத்திரி ரகுராமுக்கும் நெருங்கிய உறவினர். தற்போது ஜோதிகாவின் படத்தில் நடய இயக்குனராக பணியாற்றி வருகிறார்.

தற்போது கோடை விடுமுறைக்காக தன் குடும்பத்துடன் ஐரோப்பா, ஸ்பெயின் நாடுகளுக்கு சென்றுள்ளார். அவரின் கணவர், மற்றும் இரு மகன்களை புகைப்படத்தில் காட்டியிருக்கிறார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.