ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது…

பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் கிரைம் திரில்லர் படமான “தர்பார் ” படத்தில் நடிக்கவிருக்கிறார். இது ரஜினியின் கேரியரில் 166 -வது படமாக உருவாகவிருக்கிறது. நேற்று இப்படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது.

https://twitter.com/LycaProductions/status/1115856073079103489

ரஜினிக்கு ஜோடியாக லேடிய சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் இப்படத்தை பிரமாண்ட தயாரிப்பு நிறுவனமான லைகா ப்ரொடக்ஷன் தயாரிக்கிறது. ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிபதிவு செய்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 10-ம் தேதி மும்பையில் துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியதை அடுத்து இன்று பூஜையுடன் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.

இந்த பூஜையில் நடிகர் ரஜினிகாந்த், ஏ.ஆர் முருகதாஸ், உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டு படப்பிடிப்பை ஆரம்பித்து வைத்தனர்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.