இவங்க தான் சிம்பு தம்பி குறளரசன் திருமணம் செய்துகொள்ள போகும் பெண்ணா.! என்ன செய்றாங்க தெரியுமா.!

சிம்பு, நயன்தாரா நடித்த இது நம்ம ஆளு படத்திற்கு இசையமைத்தார் குறளரசன். அதன் பிறகு சில இந்தி படங்களிலும் பணிப்புரிந்தார். அதன் பிறகு தான் அவரது திருமண அறிவிப்பு வெளியானது.

இதற்கிடையில் குறளரசன் இஸ்லாத்திற்கு மாறினார். இசையமைப்பாளர்கள் இஸ்லாத்திற்கு மாறுவது ஃபேஷனாகி வருகிறது என்று விமர்சிக்கப்பட்டது. மேலும் அவர் தனது காதலியை திருமணம் செய்ய மதம் மாறியதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் இதற்கான காரணம் இப்போது திருமண பத்திரிக்கை மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குறளரசன் உண்மையில் நபீலா அகமது என்கிற முஸ்லீம் பெண்ணை தான் வரும் 26ம் தேதி நிக்காஹ் செய்ய உள்ளார். அதன் பிறகு 29ம் தேதி அவர்களின் திருமண வரவேற்பு சென்னையில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் நடைபெற உள்ளது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.