திடீரென சீரியலில் இருந்து விலகிய ராதிகா இனி அவருக்கு பதில் இவர் தான்.!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையான ராதிகா வெள்ளித்திரையை போலவே தற்போது சின்னத்திரையிலும் கலக்கி வருகிறார்.

சன் டிவியில் தொடர்ந்து இவரது அடுத்தடுத்த சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. தற்போது சந்திரகுமாரி என்ற வரலாற்று சீரியல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

https://twitter.com/realradikaa/status/1112585176381440000

இந்த சீரியலிலும் ராதிகாவே நடித்து வந்த நிலையில் தற்போது அவர் சீரியலில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக அந்த கதாபாத்திரத்தில் பிரபல நடிகையான விஜி சந்திரசேகர் நடிக்க உள்ளாராம்.

இதனால் ராதிகா விஜி சந்திரசேகருக்கு வாழ்த்து கூறி அவரை வரவேற்று ட்வீட் செய்துள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.