இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தின் புதிய வீடியோ!

ஹரிஷ் கல்யாணின் நடிப்பில் திரைக்கு வர உள்ள “இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்” படத்திற்கான சில நிமிட காட்சிகளை கொண்ட‌ புதிய வீடியோ வெளியாகியுள்ளது. இதில் ஹரிஷ் கல்யாண் நடித்த சண்டைக்காட்சி இடம் பெற்றுள்ளது.

மேலும் ஹரிஷ் கல்யாண் தனது இரண்டாவது படமான‌ இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியுள்ளார். இப்படத்தில் ஷில்பா மஞ்சுநாத் ஹரிஷ் கல்யாணோடு ஜோடியாக நடித்துள்ளார். ஜீரோ படத்தை தயாரித்த மாதவ் மீடியா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்த படத்தையும் தயாரித்துள்ளது.

மார்ச் 15ஆம் தேதி திரைக்கு வர உள்ள இந்த படத்தின் சண்டாளி பாடல் நேற்று வெளியானது. இதனைத்தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ திரைப்படத்தின் சில நிமிட காட்சிகள் கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.