பிரதமர் மோடியின் டுவீட்டுக்கு பதில் அளித்த ஏ.ஆர்.ரஹ்மான்

அடுத்த மாதம் 18 ஆம் தேதி, தமிழகத்தில் லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 7 கட்டங்களாக இந்த தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 100 சதவீதம் ஓட்டுப்பதிவு, நடக்க வேண்டும் என பிரதமர் மோடி, வேண்டிக்கொள் ஒன்றை வைத்துள்ளார்.

ஓட்டின் முக்கியத்துவத்தை தெரியப்படுத்தும் விதமாக, அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் பொதுமக்களை ஊக்கப்படுத்த வேண்டும் என பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.

குறிப்பாக அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மான், சல்மான்கான், அமீர்கான், ஷாரூக்கான், கரண் ஜோகர், அக்ஷய் குமார், லதா மங்கேஷ்கர், சங்கர் மகாதேவன், தீபிகா படுகோனே, மோகன்லால், அனுஷ்கா சர்மா உள்ளிட்ட பலருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

ஒவ்வொருவரும் ஊக்கப்படுத்துவதாக பிரதமருக்கு ரீ-டுவீட் செய்துள்ளனர். அந்த வங்கியில் ஆஸ்க்கர் நாயகன் ரஹ்மானுக்கு பிரதமர் வைத்த வைத்த கோரிக்கையை ஏற்று ரீ-ட்விட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.