‘நான் அங்கு இல்லவே இல்லை.. ப்ளீஸ் என்னைக் காயப்படுத்தாதீர்கள்’.. தாக்குதல் குறித்து ஜூலி வேதனை!

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியின் மூலம் அனைவராலும் அறியப்பட்டு, பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி, தொகுப்பாளினி, நடிகை என சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் ஒரு ரவுண்டு வர நினைத்தவர் ஜூலி. ஆனால் இவர் நடித்த படங்கள் இன்னும் வெளியாகாமல் உள்ளது.

இந்நிலையில் நேற்று, வேப்பேரி பகுதியில் நின்றுகொண்டிருந்த போலீஸ் ஜீப் மீது ஜூலியின் கார் மோதியது. இது குறித்து தட்டி கேட்ட, காவலர் பூபதி என்பவரை, ஜூலியின் காதலர் இப்ரான் தாக்கியதாக கூறப்பட்டது.

பின், இந்த சம்பவம் குறித்து வேப்பேரி காவலர் பூபதி, காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் “நடிகை ஜூலியின் கார் போலீஸ் ஜீப் மீது மோதியது. இதனை தட்டி கேட்க போன காவலர்களை, ஜூலியுடன் காரில் இருந்த காதலன் இப்ரான், தாக்கியதாகவும், அவருக்கு ஆதரவாக 10 பேர் கொண்ட கும்பல் போலீசை தாக்கியதாகவும் கூறியுள்ளார்.

இந்த விஷயம் சமூக வலயத்தளத்தில் காட்டு தீ போல் பரவ, பலர் ஜூலியை விமர்சிக்க துவங்கிவிட்டனர். இந்நிலையில் ஜூலி, பிரபல ஊடகம் ஒன்றிற்கு இந்த சம்பவம் குறித்து கூறுகையில், இந்த சம்பவம் நடந்த போது அந்த இடத்தில் நான் இல்லவே இல்லை என்றும், தனக்கு பல நண்பர்கள் இருக்கிறார்கள் அவர்கள் செய்த தவறுக்கு நான் எப்படி பொறுப்பு ஏற்க முடியும் என காதலரின் பிரச்சனையில் இருந்து நைசாக நழுவியுள்ளார் ஜூலி.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.