10 ஆண்டுகள் கழித்து புது சேனல், புது ஷோ – மீண்டும் சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்கும் அஞ்சனா.!

தமிழ் சின்னத்திரையில் சன் மியூசிக் சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளியாக நீண்ட வருடங்களாக பணி புரிந்து பிரபலமானவர் அஞ்சனா.

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து அவர் கயல் சந்திரனை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலானார். இதனால் அஞ்சனா ரசிகர்கள் அவரை மிகவும் மிஸ் செய்து வந்தனர்.

இந்நிலையில் தற்போது அஞ்சனா ஜீ தமிழில் ஒளிபரப்பாக உள்ள ஜூனியர்ஸ் ஸ்டார்ஸ் சீசன் 3 என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பதாக ட்வீட் மூலம் தெரியடுத்தியுள்ளார்.

இதனால் அஞ்சனா ரசிகர்கள் உற்சாகமடைந்து அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.