மாமனிதனை ஏமாற்றிய யுவன் சங்கர் ராஜா?


“மாமனிதன்” படத்தின் சம்பளம் தொடர்பாக யுவன் சங்கர் ராஜாவுக்கும், விஜய் சேதுபதிக்கும் இடையே வாய்போர் மூண்டுள்ளதாக கூறப்படுகிறது.

வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் தனக்கென ஒரு தனி பார்முலாவை வைத்திருப்பவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் வெளியாக உள்ள சூப்பர் டீலக்ஸ் படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

இதன் தொடர்ச்சியாக சைரா நரசிம்மரெட்டி, மாமனிதன் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதிக்கு, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவால் தொல்லை ஏற்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளன. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் இயக்குநர் சீனுராமசாமி இயக்கும் மாமனிதன் படத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ள நிலையில், இதில் பணியாற்றிய இயக்குநர், நடிகர், நடிகையர் மற்றும் ஊழியர்கள் வரை யாருக்கும் சம்பளம் தரவில்லை என பேச்சு அடிபடுகிறது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால், படம் துவங்கும்பொழுது அட்வான்ஸ் மட்டுமே கொடுத்துள்ளாராம்.

தமிழ் சினிமாவில் நற்பெயரை கொண்டுள்ள யுவன் சங்கர் ராஜாவை நம்பி, மாமனிதன் படத்தில் உழைத்த பட ஊழியர்கள், சினிமா சங்கத்திடம் யுவன் சங்கர் ராஜா மீது புகார் தெரிவிக்க உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தர்மதுரை படத்தின் மூலம் நல்ல நண்பர்களான யுவனும், விஜய் சேதுபதிக்கும் சம்பள விவகாரத்தில் வாய்போர் மூண்டுள்ளதாக கூறப்படுகிறது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.