39வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ரஜினிகாந்த் – லதா ஜோடி: ரசிகர்கள் வாழ்த்து..!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த் ஜோடி, தங்களின் திருமண வாழ்வில் 38 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்து 39வது ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றனர். இவர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று தனது 38வது திருமண ஆண்டை கொண்டாடினார். இவருக்கு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் சமூக வலைதளம் மூலம், ரஜினிக்கும், லதா ரஜினிகாந்திற்கும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

ரஜினிகாந்த் கடந்த 1981 பிப்ரவரி 26ம்தேதி லதாவை திருமணம் செய்துகொண்டார். இதற்காக வாழ்த்து தெரிவிக்க ரஜினிகாந்தின் வீட்டின் முன் ரசிகர்கள் குவிந்தனர்.

தொடர்ந்து அவர்களை சந்தித்த ரஜினி, அவர்களின வாழ்த்துகளை பெற்றுக் கொண்டார்.

இந்நிலையில் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த், பெற்றோர் திருமண நாளை முன்னிட்டு அவர்களுக்கு டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.