தளபதி63 ரிலீஸ் டேட்! விஜய் ரசிகர்களுக்கு தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சி…!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 63 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

AGS சினிமாஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என ஆரம்பத்திலேயே அறிவிப்பு வெளியாகி இருந்தது.

இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருவதால் படத்தையும் முன் கூட்டியே ஆகஸ்ட் மாதத்தில் ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

இது குறித்து தற்போது இப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கூறியிருப்பதாவது, படம் ஆகஸ்ட் மாதமே வெளியாக உள்ளதாக வெளியான தகவல் உண்மையில்லை. ஏற்கனவே அறிவித்திருந்தபடி இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என கூறியுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.