ஜெயம் ரவியை பெருமைப்படுத்திய மகன் ஆரவ் – மகிழ்ச்சியில் குடும்பம்! குவியும் வாழ்த்துக்கள்!

தமிழ் சினிமாவில் பிரபலங்களின் வாரிசுகள் அடுத்தடுத்து அறிமுகமாகி தங்களுக்கான இடத்தை தக்கவைத்துக்கொள்கின்றனர். அந்த வகையில் ஜெயம் ரவி நடித்த ‘டிக் டிக் டிக் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் ஜெயம் ரவியின் மகன் ஆரவ். இந்த படத்தில் அப்பாவுக்கு மகனாக நடித்த ஆரவ் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற எடிசன் விருது வழங்கும் விழாவில் ‘டிக் டிக் டிக்’ படத்திற்காக நடிகர் ஜெயம் ரவியின் மகன் ஆரவ்விற்கு சிறந்த அறிமுக குழந்தை நட்சத்திரத்திற்கான விருது கிடைத்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஜெயம் ரவி. இதனை பார்த்த ரசிகர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.