ஒல்லியாக மாறிய அனுஷ்கா – ரசிகர்களை ஷாக்காக்கிய புகைப்படம்..!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அனுஷ்கா. தமிழில் ரஜினி, அஜித், விஜய், சூர்யா என அத்தனை முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்து விட்டார்.

பாகுபலி, பாகமதி, அருந்ததி என பிரம்மாண்ட படங்களிலும் தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வெற்றி கண்டவர்.

இவர் ஆர்யாவுடன் இணைந்து நடித்த இஞ்சி இடுப்பழகி என்ற படத்திற்காக உடல் எடையை அதிகரித்து அதன் பின்னர் குறைக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார்.

இதனால் வெளிநாட்டில் உடல் எடை குறைப்பிற்கான சிகிச்சையில் இருந்து வந்த அனுஷ்கா தன்னுடைய உடல் எடையை முற்றிலுமாக குறைந்த பழைய நிலைக்கு வந்துள்ளார்.

அந்த புகைப்படங்கள் சமூக வளையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.