ஓவியாவின் 90ml படம் வயது வந்தவர்களுக்கு மட்டும்! அதிர்ச்சி தகவல்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்ற நடிகை ஓவியா நடித்த ‘காஞ்சனா 3’ வரும் ஏப்ரலில் வெளியாகவுள்ள நிலையில் அவர் நடித்து வரும் மற்றொரு படமான 90ml திரைப்படமும் ரிலீசுக்கு தயாராகிவிட்டது.

இந்த நிலையில் இன்று 90ml படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் இந்த படத்திற்கு ‘A’ சர்டிபிகேட் அளித்துள்ளனர். இதனால் இந்த படம் வயது வந்தவர்களுக்கான படமாக உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் வெளிவரும் முதல் ஓவியாவின் படத்தை குழந்தைகள் பார்த்து ரசிக்க முடியாதது ஒரு அதிர்ச்சி என்றே கூறப்படுகிறது.

இந்த படத்தில் ஓவியா அழகுநிலையத்தில் பணிபுரியும் பெண்ணாக நடித்துள்ளதாகவும், ஒரு பெண் சுயமாக முடிவெடுக்கும் திறன் உள்ளவராக இருக்க வேண்டும் என்பதே இந்த படத்தின் கதை என்றும் இந்த படத்தை இயக்கிய அனிதா உதூப் கூறியுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.