அப்படியே மார்டன் கெட்டப்பிற்கு மாறிய செந்தில் மற்றும் ராஜலட்சுமி!! புகைப்படம் உள்ளே!

பிரபல தொலைகாட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நாட்டுப்புற பாடல்களை பாடி பிரபலமானவர்கள் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலக்ஷ்மி.

இவர்கள் இருவரும் தற்போது திரைப்படங்களிலும் பாட தொடங்கி விட்டனர். விஸ்வாசம் படத்தில் கூட இருவரும் இணைந்து பாடி இருந்தனர்.

இதுவரை தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டை மற்றும் புடவையிலேயே பார்த்து பழகி போன இவர்களை மாடர்ன் உடையில் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஆம், Mr. சின்னத்திரை என்ற பெயரில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிக்காக தான் இவர்கள் இவ்வாறு மாறியுள்ளனர்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.