வந்தா ராஜாவாக தான் வருவேன் படத்தை பற்றி வெளியான அதிரடி அறிவிப்பு.!

சுந்தர் சி இயக்கத்தில் சிம்பு, மஹத், கேத்ரின் தெரசா, மேகா ஆகாஷ் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ள படம் வந்தா ராஜாவாக தான் வருவேன்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது. நாளை முதல் இப்படத்தின் பாடல்கள் வெளியாக உள்ளது.

ஏற்கனவே ரெட் கார்டு, வாங்க மச்சான் வாங்க ஆகிய படங்கள் வெளியாகி செம வரவேற்பை பெற்று வருகின்றன.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் சென்சார் பணிகள் நிறைவடைந்து படத்திற்கு U சான்றிதழ் கிடைத்திருப்பதாகவும் அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.