மீண்டும் அஜித் பெயரில் அரசியலில்.. அடிச்சு தூக்கிய தமிழிசை பேச்சு.!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் அரசியல் சாயம் இல்லாமல் தான் உண்டு தன் வேலையுண்டு என இருந்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அஜித் ரசிகர்கள் என்ற பெயரில் 100 பேர் பாஜகவில் இணைந்தனர். அப்போது பேசிய தமிழிசை மோடியின் திட்டங்களை அஜித் ரசிகர்கள் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என கூறியிருந்தார்.

இதனையடுத்து அஜித் அதிரடியாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு எனக்கு அரசியல் ஆசை இல்லை. என் பெயரையும் என் ரசிகர்கள் பெயரையும் அரசியலுக்கு பயன்படுத்த வேண்டாம் என கூறியிருந்தார்.

எனவே தமிழிசை நாங்கள் அஜித்தை எங்களது கட்சிக்கு அழைக்கவில்லை என கூறினார். மேலும் எச். ராஜா அஜித்துக்கு நூலும் விடவில்லை, கயிறும் விடவில்லை என கிண்டலடித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது மீண்டும் தமிழிசை பாஜகவில் 2000 அஜித் ரசிகர்கள் இணைந்துள்ளனர். நல்ல மனிதரை பின்பற்றுவது போல இனி நல்ல தலைவரையும் பின்பற்றுங்கள் என கூறி பேசியுள்ளார்.

ஏற்கனவே தமிழிசையை திட்டி தீர்த்து வரும் நெட்டிசன்கள் இந்த பேச்சால் இன்னும் என்னவெல்லாம் செய்ய போகிறார்களோ? என்ற பரபரப்பு எழுந்துள்ளது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.