திருமலை படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவரா? – வெளியான அதிர்ச்சி புகைப்படம்.!

திருமலை படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் என்பது தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக தளபதியாக விளங்கி வருபவர் விஜய். இவர் தற்போது அட்லீ இயக்கத்தில் தளபதி 63 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவரது நடிப்பில் வெளியாகி ஹிட்டான திருமலை படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த ஜோதிகாவுக்கு பதிலாக நடிக்க இருந்தது யார் என்பது தெரிய வந்துள்ளது.

வெறும் தகவலாக மட்டுமில்லாமல் இது குறித்த புகைப்படம் ஒன்றும் கசிந்துள்ளது. ஆம், திருமலை படத்தில் முதலில் ஜோதிகாவுக்கு பதிலாக தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபுவின் மனைவியும் நடிகையுமான நம்ரதா தான் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

திடீரென சில காரணங்களால் அவர் இப்படத்தில் இருந்து விலகி கொள்ளவே அவருக்கு பதிலாக ஜோதிகா நடித்துள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.