உனக்கு இதுக்கெல்லாம் நேரம் இருக்காது……. ஆனா….. குத்து ரம்யாவை வருத்தெடுக்கும் ரசிகர்கள்!

ரவுடி பேபி பாடல் சாதனைக்கு வாழ்த்திய நடிகை குத்து ரம்யாவை கன்னட ரசிகர்கள் வருத்தெடுத்து வருகின்றனர். படம் எதிர்பார்த்த அளவில் வெற்றிப் பெறவில்லை என்றாலும், ஒரு ஸ்டைல் டிரண்டை படம் உருவாக்கியது.

பொல்லாதவன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த நடிகை குத்து ரம்யா, வாழ்த்து தெரிவித்தார்.

நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மாரி’. பாலாஜி மோகன் இயக்கிய இப்படத்தில் காஜல் அகர்வால், ரோபோ ஷங்கர், விஜய் யேசுதாஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
படம் எதிர்பார்த்த அளவில் வெற்றிப் பெறவில்லை என்றாலும், ஒரு ஸ்டைல் டிரண்டை படம் உருவாக்கியது. அதற்கு இப்படத்தில் இடம்பெற்ற காமெடிக் காட்சிகளும், பாடல் காட்சிகளும் முக்கிய காரணம் என கூறலாம்.

இந்நிலையில், அந்தப் படத்தின் தொடர்ச்சியாக ‘மாரி 2’ படம் வெளியானது. பாலாஜி மோகன் இயக்கியுள்ள இப்படத்தில் தனுஷுடன் சாய் பல்லவி, வரலட்சுமி சரத்குமார், டோவினோ தாமஸ், கிருஷ்ணா மற்றும் ரோபோ ஷங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்தார்.

அந்த படத்தில் இடம் பெற்ற ரவுடி பேபி பாடல் வைரலானது. சமீபத்தில் அந்த பாடலின் வீடியோ யூடியூப்பில் வெளியானது. இந்நிலையில் இதுவரை எந்த தமிழ்த் திரைப்பட பாடல் வீடியோவும் செய்யாத சாதனையை ரவுடி பேபி செய்துள்ளது. 100 மில்லியனை (10 கோடி பார்வைகள்) கடந்த பார்வைகள் பெற்ற முதல் தமிழ் வீடியோ பாடல் என்ற சாதனையை படைத்துள்ளது.

இதை நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதைப்பார்த்த பொல்லாதவன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த நடிகை குத்து ரம்யா, வாழ்த்து தெரிவித்தார். இதைப்பார்த்த கன்னட ரசிகர்கள் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற கே.ஜி.எப்., பாராட்ட உங்களுக்கு நேரமில்லையா என அவரை வருத்தெடுத்து வருகின்றனர்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.