அஜித்துடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது… ஆனால்: மனம் திறந்த டிடி

தனக்கு கிடைத்த மிக பெரிய வாய்ப்பை தவறவிட்டதுகுறித்து தொகுப்பாளி டிடி பேசியுள்ளார்.

சின்னத்திரை என்றாலே அனைவருக்கும் நியாபகம் வரும் முகம் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி. டிடி என்று செல்லமாக அழைக்கப்படும் இவர் தனது சின்னத்திரை பயணத்தில் 20 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளார்.

இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு அஜித் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாகவும், ஆனால் முட்டியில் அறுவை சிகிச்சை செய்திருந்ததால் நடிக்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார். இதனால் மிகவும் வருந்தியதாகவும் டிடி தெரிவித்துள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.