கண்ணே கலைமானே படத்தை பாராட்டிய விஜய் சேதுபதி

தர்மதுரை படத்தைத் தொடர்ந்து சீனு ராமசாமியும், தமன்னாவும் இதில் இரண்டாவது முறையாக இணைந்திருக்கிறார்கள். இவர்களுடன் வடிவுக்கரசி, வசுந்த்ரா காஷ்யாப் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.

தனது ரெட் ஜெயண்ட் ஃபிலிம்ஸ் மூலம் உதயநிதியே இந்த ‘கண்ணே கலைமானே’ படத்தைத் தயாரித்திருக்கிறார். கவிஞர் வைரமுத்துவின் வரிகளுக்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் டிரைலர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் படத்தை பார்த்த நடிகர் விஜய் சேதுபதி, அதனை பாராட்டி உள்ளது.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இப்போது தான் கண்ணே கலைமானே படம் பார்த்தேன்… காதலையும், பெண்மையையும், அழகாகவும் ஆழமாகவும் காட்டியுள்ளார் இயக்குநர் சீனுராமசாமி. அனைவருக்கும வாழ்த்துக்கள். தியேட்டருக்கு சென்று தவறாமல் பாருங்கள். நல்ல அனுபவமாக இருக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.