திருமணம் பற்றி முதன்முறையாக ஓபனாக பேசிய விஷால்

நடிகர் விஷால் நடிப்பதை தாண்டி நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என இரண்டு சங்கங்களை நிர்வகித்து வருகிறார்.

நடிகர் சங்கம் கட்டிடம் முடித்து முதல் திருமணமாக தன்னுடைய திருமணம் நடக்கும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், ஐதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபர் விஜய் ரெட்டியின் மகள் அனிஷாவை திருணம் செய்ய இருப்பதாகவும், நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகவும் கூறப்பட்டது.

இதுபற்றி விஷால் கூறுகையில், அனிஷாவை திருமணம் செய்து கொள்ள இருப்பது உண்மை தான். இது காதல் திருமணம் அல்ல. பெற்றோர்கள் நிச்சயித்த திருமணம். நிச்சயதார்த்தம் எதுவும் நடைபெறவில்லை. நிச்சயதார்த்தம், திருமண தேதிகளை குடும்பத்தினர் முடிவு செய்வார்கள்.

நான், ஏற்கெனவே சொன்ன மாதிரி நடிகர் சங்கத்தின் புதிய கட்டடத்தில் தான் திருமணம் நடக்கும். திருமணம் பற்றிய விபரங்களை விரைவில் முறைப்படி அறிவிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.