ரியோ – நட்சத்திரா நடிக்கும் காதல் ஒன்று கண்டேன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் ரியோ. இவர் தொகுத்து வழங்கும் ரியாலிட்டி ஷோ மற்றும் இவர் நடித்த சீரியல் ஆகியவற்றில் இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் தனது சொந்த தயாரிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தில் இவரை கதாநாயகனாக நடிக்க வைக்க இருப்பதாக ஏற்கனவே அறிவித்தார். இந்நிலையில், ரியோ நடிக்கும் மற்றொரு புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காதல் ஒன்று கண்டேன் என்று தலைப்பு கொண்ட இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நட்சத்திரா நடிக்கிறார். மேலும் அஸ்வின் குமார், நாகேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். புனித் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி உள்ளது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.