மறைந்த முதல்வர் ஜெயலலிதா சுயசரிதையில் சசிகலாவாக பிரபல நடிகை..!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சுயசரிதை படத்தில் சசிகலா வேடத்தில் சாய் பல்லவி கமிட் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஒரு பக்கம் இயக்குனர் பிரியதர்ஷினி தி அயர்ன் லேடி என்ற பெயரில் ப்ர்ஸ்ட் லுக் விட்டுடாங்க, இன்னொரு பக்கம் கௌதம் மேனன் ரம்யா கிருஷ்ணனவைச்சு வெப் சீரியஸ் பண்ண போறதாகவும் தகவல் வந்துருக்கு.

இதேபோல் இயக்குனர் ஏஎல்விஜய்யும், படம் எடுக்கப்போறதாக தகவல் வந்திருக்கு. இதில் ஜெயலலிதாவின் கேரக்டரில் வித்யாபாலன் கமிட் ஆகியிருக்கங்களாம். அதே ப்ராஜக்டல ஜெயலலிதாவுடைய க்ளோஸ் பிரண்ட் கேரக்டருக்கு சாய்பல்லவிதான் கமிட் ஆகி இருக்காங்களாம்.

தன்னுடைய கரு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுல சாய் பல்லவியை நடிக்க வச்ச ஏஎல் விஜய், இந்த படத்துல ரொம்ப ஸ்ராங்கான ரோலான சசிகலா கேரக்டரை சாய் பல்லவிக்கு கொடுத்திருக்காராம்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.