தளபதிக்கு பிறகு விமான நிலையத்தில் அவமானப்படுத்தப்பட்ட இசையமைப்பாளர்..!!!


சென்னை: தொடர்ந்து 8வது முறையாக சிட்னி விமான நிலையத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனை ரசாயன பொருள் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

அட்டக்கத்தி படம் மூலம் இசையமைப்பாளரானவர் சந்தோஷ் நாராயணன். பீட்ஸா, சூது கவ்வும், ஜிகர்தண்டா, குக்கூ, இறுதிச் சுற்று, இறைவி, கபாலி, கொடி, பைரவா உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

சிட்னி விமான நிலையத்தில் சந்தோஷ் நாராயணன் அவமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தோஷ்
சிட்னி

தொடர்ந்து 8வது முறையாக என்னிடம் சிட்னி விமான நிலையத்தில் ரசாயன பொருட்கள் சோதனை நடத்தப்பட்டது. நான் எவ்வளவோ சொல்லியும் அந்த அதிகாரி என் பேச்சை கேட்கவில்லை. நிறத்தின் அடிப்படையால் இப்படி செய்வது நிறுத்தப்பட வேண்டும் என்று சந்தோஷ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ஏர்போர்ட்
விளக்கம்


உங்களை வேண்டும் என்றே தேர்வு செய்து சோதனை செய்யவில்லை. இது உங்களுக்கு புரியும் என்று நம்புகிறோம் என்று சந்தோஷின் ட்வீட்டை பார்த்துவிட்டு சிட்னி விமான நிலைய அதிகாரிகள் பதில் அளித்துள்ளனர்.

நன்றி
நிற பாகுபாடு

சிட்னி விமான நிலையத்தினர் விளக்கம் அளித்ததற்கு சந்தோஷ் நன்றி தெரிவித்துள்ளார். ஆனால் நிறத்தின் பெயரால் இப்படி அதிகாரிகள் நடந்து கொள்வதை அனுமதிக்க வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

சுற்றுலா
வேலை

சுற்றுலா பயணம் என்றால் நமது நாட்டில் அதை விட அழகான ஊர்கள் உள்ளன. வேலை விசயமாக என்றால் நமது நாட்டிலே அதை செய்து முடிக்க போதுமான வசதி இல்லையா?? நம்மை சரியாக உபசரிக்காத இடத்திற்க்கு அழையா விருந்தாளியாக நாம் ஏன் செல்ல வேண்டும்..??

ஷாருக்கான்
அமெரிக்கா


பாலிவுட் நடிகர் ஷாருக்கான் அமெரிக்க விமான நிலையத்தில் பல முறை அவமதிக்கப்பட்டுள்ளார். காரணம் அவர் பெயரில் இருக்கும் கான். என் பெயர் கான் நான் தீவிரவாதி அல்ல என்று அவர் கூறியும் யாரும் நம்பவில்லை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#