வாய்ப்புகளை மறுத்ததால் அடையாளத்தை இழந்த பெப்சி உமா..!!!


பிரபல தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகிய ஒரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து, சினிமா பிரபலங்களை விட அதிகமான ரசிகர்களை வைத்திருந்தவர்தான் தொகுப்பாளர் பெப்சி உமா.

எம்.பி.ஏ பட்டதாரியான இவர் 1990 ஆம் ஆண்டு தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமானார். பின் பிரபல தொலைக்காட்சியில் “வாங்க வாழ்த்தலாம்” என்கிற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இவருக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்ததால், இவருக்காகவே ‘பெப்சி உமா” என்கிற நிகழ்ச்சி உருவாக்கப்பட்டு அந்த நிகழ்ச்சியை 15 வருடமாகத் தொகுத்து வழங்கி வந்தார். மேலும் UTV யின் சிறந்த தொகுப்பாளர் என்கிற விருதைப் பெற்ற முதல் தொகுப்பாளர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.


இவருக்கு ரஜினி, கமல், சிவாஜி போன்றோருடன் நடிக்க வாய்ப்பு வந்த போது கூட இவர் அந்த வாய்ப்புகள் அனைத்தையும் தவிர்த்தவர். மேலும் கிரிக்கெட் வீரர் சச்சினுடன் பெப்சி விளம்பரத்தில் நடிக்க வாய்ப்புகள் வந்தபோது அதனையும் ஏற்காமல் இருந்தவர் தான் பெப்சி உமா என்கிற உமா மகேஸ்வரி.

தற்போது தன்னுடைய கணவரின் நிறுவனத்தை நிர்வகித்து வரும் இவருக்கு மீண்டும் சின்னத்திரையில் தொகுப்பாளராக வாய்ப்பு கிடைத்தது. பிரபல தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நீண்ட நாட்களுக்குப் பின் இவர் சின்னத்திரையில் வந்தாலும் இவருக்கு, ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்தது. ஆனால் சில மாதங்கள் மட்டுமே அவர் இந்த நிகழ்ச்சியை நடத்தினார் பின் அந்த நிகழ்ச்சியில் இருந்தும் விலகினார்.


சமீபத்தில் ஏன் இந்த நிகழ்ச்சியை விட்டு விலகினீர்கள் என ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இவரிடம் கேட்டபோது, அரசியல் ரீதியாக பல்வேறு தொந்தரவுகள் இருந்ததால். எந்த ஒரு பிரச்சனையிலும் சிக்கிக் கொள்ளாமல் தன்னை காத்துக்கொள்ள விலகியதாக கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#