சின்மயி மீடு மூலம் பிளாக் மெயில் செய்கின்றார்..!!! ராதா ரவி ஆவேச பேச்சு..!!


கவிஞர் வைரமுத்து மீது சின்மயி மீடூ இயக்கம் மூலம் பாலியல் குற்றச்சாட்டு கூறினார்.

இது கடந்த சில வாரங்களாக தமிழ் சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சின்மயி 2 ஆண்டுகளாக சந்தா செலுத்தவில்லை என்று கூறி அவரை டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து கடந்த வாரம் நீக்கினார்கள். ஆனால் சின்மயிதான் வாழ்நாள் உறுப்பினருக்கான கட்டணத்தை வங்கி மூலம் செலுத்தியதாக தெரிவித்தார்.

இதுதொடர்பாக டப்பிங் கலைஞர்கள் சங்க தலைவர் ராதாரவி கூறியதாவது:-

வைரமுத்து உள்ளிட்டோர் மீது சின்மயி பாலியல் புகார் தெரிவித்து பிளாக் மெயில் செய்தார். அங்கு ஒன்றும் நடக்கவில்லை என்பதால் டப்பிங் யூனியன் பக்கம் திரும்பிவிட்டார்.

சின்மயியை டப்பிங் சங்கத்தில் இருந்து நீக்கியது தேர்தல் ஆணையர் வாசுகி அம்மாள். நீக்கிய பிறகு அவர் சங்கம் பற்றி பேசக் கூடாது. வாழ்நாள் உறுப்பினர் சந்தாவை வங்கி கணக்கு மூலம் செலுத்தியதாக சின்மயி கூறுவது பொய். வைரமுத்து வி‌ஷயத்தில் அவர் கூறிய பாஸ்போர்ட் கதை போன்று தான் வங்கிக் கணக்கு கதையும்.

எல்லாமே பொய். வாழ்நாள் உறுப்பினர் அடையாள அட்டையை காட்டச் சொல்லுங்கள்.

சின்மயி யார் மீது வேண்டுமானாலும் மீ டூ புகார் தெரிவிக்கட்டும். ஏன் அவர் பிறந்தபோதே மீ டூ நடந்தது என்று கூட சொல்லட்டும். அவர் யார், யாரின் பெயர்களை கூறி பணம் பெற நினைக்கிறாரோ அவர்களின் பெயரை சொல்லட்டும். அதற்கும் டப்பிங் சங்கத்தில் இருந்து நீக்கியதற்கும் தொடர்பு இல்லை.

சின்மயி உள்நோக்கத்துடன் மீ டூ புகார் தெரிவித்து வருகிறார். தற்போது மீ டூவை ஆறப்போட்டுவிட்டு டப்பிங் சங்கம் பக்கம் வந்துள்ளார். நான் விஷாலுக்கு ஆதரவாக பேசுகிறேன் என்று நினைக்க வேண்டாம்.

விஷால் ஒரு வீட்டிற்கு இரவு 3 மணிக்கு வந்துவிட்டு 5 மணிக்கு சுவர் ஏறி குதித்துச் சென்றதாக கூறுகிறார்கள். அதுவரை அவர் பாலியல் குற்றம் செய்ய முயற்சி செய்தாரா? அப்படி இல்லையே.

இவ்வாறு அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.