நயன்தாராவை தொடர்ந்து விஜய்யுடன் இணையும் மற்றொரு நடிகை..! யார் தெரியுமா..?


‘சர்கார்’ வெற்றிப் படத்தை அடுத்து நடிகர் விஜய் அட்லி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த கூட்டணி ‘தெறி’, ‘மெர்சல்’ படத்தை அடுத்து மூன்றாவது முறையாக இணைகின்றன. விஜய் நடிக்கவுள்ள புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் ‘வில்லு’ படத்தை அடுத்து 9 வருடங்கள் கழித்து விஜய்யுடன் இணைகிறார்.


இந்நிலையில் தற்போது இந்த படத்தில் ‘மேயாத மான்’ படத்தில் நடித்த நடிகை இந்துஜாவும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் அவரின் கேரக்டர் என்னவாக இருக்கும் என பெரிய எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. விஜய்க்கு தங்கையாக இருக்குமோ என்றும் கூறுகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.