ராட்சசன் படத்தின் வில்லன் யார் தெரியுமா..? வைரல் புகைப்படம்..!!


முண்டாசுப்பட்டி படத்திற்கு பிறகு ராம்குமார் – விஷ்ணு விஷால் இரண்டாவது முறையாக இணைந்திருக்கும் `ராட்சசன்’ படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

ரசிகர்களை சீட்டின் நுனியிலேயே உட்கார வைக்கும் சைக்கோ த்ரில்லர் கதையான இந்த படம் 25 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், நேற்று நடைபெற்ற படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தில் வில்லனாக, சைக்கோ கொலைகாரனாக நடித்திருந்தவர் சரவணன் என்பவரை படக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது.


சரவணன் என்பவர் தான் ராட்சசன் படத்தில் கிறிஸ்டோபர் என்ற மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த சைக்கோ கொலைகாரனை கண்டுபிடிக்க போராடும் போலீஸ் அதிகாரியாக விஷ்ணு விஷால் நடித்திருக்கிறார். விஷ்ணு ஜோடியாக அமலாபாலும், முக்கிய கதாபாத்திரத்தில் சூசேன் ஜார்ஜ், சஞ்சய், காளி வெங்கட், ராம்தாஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

ஆக்சஸ் பிலிம் ஃபாக்ட்ரி மற்றும் டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!