நயனை விடாமல் துரத்தும் காமெடி நடிகர்..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!


எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் திரைப்படத்திற்குப் பிறகு இயக்குனர் சர்ஜன் இயக்கும் படம் ஐரா.

இப்படத்தில் நயன்தாரா இரட்டை வேடத்தில் நடிக்கிறார். ஹாரர் த்ரில்லர் படமாக இப்படம் தயாராகிறது. ஐரா என்றால் யானைகளின் அரசன் என்று அர்த்தமாம். பல யானைகளின் அரசனாக இருக்கும் ஒரு யானையின் பலம்பொருந்தியவள் போன்ற ஒரு கதாபாத்திரம்தான் நயன்தாராவின் கதாபாத்திரம் என சொல்லப்படுகிறது.

கோலமாவு கோகிலா திரைப்படத்திற்கு பிறகு இப்படத்தில் யோகிபாபு நயன்தாராவுடன் நடிக்கிறார். யோகிபாபுவிற்கு இப்படத்தில் மிகக்குறைவான காட்சிகளே இருந்தாலும் அது மிக முக்கியமான கதாபாத்திரம் என இயக்குனர் தெரிவித்திருக்கிறார்.


ஹாரர் படங்களில் ஆங்காங்கே மழைச்சாரல் போல தூவப்பட்டிருக்கும் காமடிபோல இப்படத்தில் இருக்காது. முழுக்க முழுக்க பயமூட்டக்கூடிய வகையில் ஹாரராகவே இருக்கும் என்கிறார் சர்ஜன்.

இப்படத்தில் கலையரசன், ஜெயப்பிரகாஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விஸ்வாசம் திரைப்படத்தின் தமிழக திரையரங்க உரிமையை வாங்கியுள்ள கேஜேஆர் ஸ்டுடியோ இப்படத்தை கிறிஸ்துமஸுக்கு ரிலீஸ் செய்ய உள்ளதாக சொல்லப்படுகிறது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!