அதிக இலாபத்தை தந்து சாதனை படைத்த நாள்..!! எப்படி தெரியுமா..?


அஜித் இன்று தென்னிந்தியாவிலேயே தனக்கென்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டத்தை வைத்திருக்கும் ஒரு நடிகர். இவர் நடிப்பில், சிவா இயக்கத்தில் இரண்டு வருடங்களுக்கு முன் இதே நாளில் வெளிவந்த படம் தான் வேதாளம்.

விமர்சனங்கள் ரீதியாக வேதாளம் பெரிதும் வரவேற்பு பெறவில்லை என்றாலும், வசூலில் இதுவரை தமிழ் சினிமா கண்டிராத ஓப்பனிங் இப்படத்திற்கு இருந்தது.

ரஜினியின் லிங்கா படத்தின் முதல் நாள் வசூலை முறியடித்த முதல் படம் அஜித்தின் வேதாளம் தான், உலகம் முழுவதும் இப்படம் ரூ 125 கோடி வரை வசூல் செய்தது.

இதில் என்ன சிறப்பம்சம் என்றால் இப்படம் மிக குறைந்த நாட்களில், குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது, மேலும், வியாபாரமும் அதிக தொகை இல்லாமல், டீசண்டாக தொகைக்கே நடந்தது.


ஆனால், முதல் வார வசூலே ரூ 50 கோடி தமிழகத்தில் மட்டுமே தாண்டியது, இதன் காரணமாக முதல் வாரத்திலேயே தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என அனைத்து தரப்பினருக்கும் லாபம் கொடுத்தது.

அஜித்தின் அடுத்தப்படத்தையும் சிவா தான் இயக்குகின்றார் என கிசுகிசுக்கப்படுகின்றது, கண்டிப்பாக ரசிகர்கள் சிவாவிடமிருந்து வேதாளம் போல் ஒரு தரலோக்கல் படத்தை தான் எதிர்ப்பார்ப்பார்கள்.

இதனால் சிவாவும் தன் அடுத்தப்படத்தை இந்த ஸ்டைலில் தான் எடுப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!