ஆத்தாடி.. இது எல்லாமே கொரியன் படத்தோட காப்பிதானா..? பாருங்க ஷாக் ஆயிடுவீங்க..!!


கொரிய மொழிப்படங்களிலிருந்து தழுவி எடுக்கப்பட்ட சில தமிழ்ப்படங்களின் பட்டியல்.

நல்ல கதைகள், நல்ல படங்கள் எந்த மொழியில் இருந்தாலும் அதை நம்மொழிக்கு கொண்டு சேர்ப்பதில் ஒன்றும் தவறில்லை. அந்த வகையில் பல திரைப்படங்கள் மற்ற மொழிப்படங்களிலிருந்து தமிழில் எடுக்கப்பட்டுள்ளன.

இப்போது கொரியன் மொழிப் படங்களிலிருந்து தழுவி எடுக்கப்பட்ட மற்றும் ரீமேக் செய்யப்பட்ட படங்களை பார்க்கலாம்.

யாமிருக்க பயமே


1998 ஆம் ஆண்டு கிம் ஜீன் வூன் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் “தி கொயட் ஃபேமிலி”. அமைதியான வாழ்க்கையைத் தேடி ஒரு மலை பங்களாவில் குடும்பத்துடன் தங்குகிறார்கள். அந்த பங்களாவை அப்படியே லாட்ஜாக மாற்றுகிறார்கள். அந்த லாட்ஜில் வந்து தங்கும் ஒவ்வொரு விருந்தினரும் மர்மமான முறையில் இறக்கின்றனர். இதுதான் இந்தப்படத்தோட கதை.

சரி மீதிக்கதை எங்கேன்னு கேக்குறீங்களா? அத நீங்கள் பார்த்திருப்பீர்கள். தீக்கே இயக்கத்தில் கிருஷ்ணா, ரூபா மஞ்சரி, கருணாகரன், ஓவியா நடிப்பில் வெளிவந்த “யாமிருக்க பயமே” திரைப்படம் அந்த கொரியன் படம்.

காதலும் கடந்துபோகும்

2010ஆம் ஆண்டு கொரிய இயக்குனர் கிம் க்வாங் சிக் இயக்கத்தில் வெளிவந்த படம்தான் இந்த மை டியர் டெஸ்பராடோ. ஐடி கம்பெனிக்கு வேலை தேடி வரும் ஒரு பெண். அந்த பெண் வீட்டுக்கு கீழே குடியிருக்கும் ஒரு ரௌடி. இரண்டுபேருக்கும் மோதல் ஆரம்பிச்சு காதல்ல முடியுறதுதான் இந்த படத்தோட கதை.


சரபம்

கெய்கோ ஹிகாஷினோ என்ற ஜப்பானிய எழுத்தாளரின் நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட த்ரில்லர் படம்தான் கேம். இது ஜப்பான் மற்றும் கொரிய மொழிகளில் வெளியாகி வெற்றிபெற்றது. பணத்திற்காக ஹீரோ அலையும்போது ஹீரோயின் தன்னை கடத்துவதுபோல் நாடகம் ஆடி அவளின் அப்பாவிடமிருந்து வரும் பணத்தை பங்குபோட்டுக் கொள்ளலாம் என ஐடியா கொடுக்கிறார். கடத்திய பிறகு ஹீரோவுக்கு வரும் சிக்கல்கள் இதுதான் கதை.

இந்த படத்தின் த்ரில்லர் குறையாமல் தமிழில் கொடுக்க முயற்சித்த படம்தான் அருண்மோகன் இயக்கத்தில் நவீன் சந்திரா, சலோனி லுத்ரா நடித்த “சரபம்”. இப்படம் இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.


புலிவால்

கொரியன் இயக்குனர் கிம் ஹான் மின் இயக்கத்தில் 2009ல் வெளிவந்த திரைப்படம் ஹேண்ட்மேன். ஒரு மொபைல் போன் வீடியோதான் மையக்கரு. இப்படத்தை மலையாளத்தில் சப்பா குருஷு என்ற பெயரில் ரிமேக் செய்தார்கள்.

பிறகு தமிழில் விமல், பிரசன்னா, ஓவியா அனன்யா நடிப்பில் புலிவால் என ரிமேக் செய்யப்பட்டது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!