மகன் வயது இளைஞரை கரம் பிடிக்க ரெடியான நடிகை..!! வைரல் புகைப்படத்தால் அதிர்ச்சி..!!


தனது திருமணம் குறித்து வெளியான செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனக்கு விரைவில் திருமணம் நடக்கப்போகிறது என அறிவித்துள்ளார் நடிகை பிரியங்கா சோப்ரா.

இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவும் அமெரிக்காவை சேர்ந்த பாப் பாடகர் நிக் ஜோனசும் காதலிக்கின்றனர். பிரியங்கா சோப்ராவுக்கு 35 வயது ஆகிறது. நிக் ஜோனசுக்கு 25 வயது.

10 வயது குறைவான நபரை காதலிப்பதாக மறைமுக விமர்சனங்கள் எழுந்த நிலையில், தற்போது இருவரும் திருமணம் செய்துகொள்ளவிருக்கின்றனர்.


இவர்களது திருமணத்திற்கு பிரியங்காவின் பெற்றோர் சம்மதம் தெரிவித்துவிட்டனர். இதுகுறித்து பிரியங்கா கூறியதாவது,

எனக்கு திருமணத்தில் நம்பிக்கை உள்ளது. விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு உள்ளேன்.

திருமணம் என்பது பெண்ணியவாத கருத்துக்களுக்கு எதிரானது அல்ல. எனது கொள்கை நிலைப்பாடுகளுக்கு திருமணம் இடையூறாக இருக்காது என்று நினைக்கிறேன்.

பெண்களுக்கு என்று சொந்த விருப்பங்கள் இருக்கின்றன. அதில் யாரும் குறுக்கிட கூடாது. யாராவது ஒருவர் நம்மை அக்கறையுடன் கவனித்துக்கொண்டால் அவர் கள் நமக்கு விசே‌ஷமானவராகவும் முக்கியமானவராகவும் தெரிவார் என்று கூறியுள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!