மிகவும் மோசமான கார் விபத்தில் சிக்கிய பிரபல நடிகை..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!


தமிழில் சிகரம் தொடு, வானவராயன் வல்லவராயன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மோனல் கஜ்ஜர் . குஜராத்தை சேர்ந்த இவர் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், குஜராத்தி உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் விபத்து ஒன்றில் சிக்கிக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்த மோனல் கஜ்ஜர்,


நான் என் குடும்பத்தாருடன் அஹமதாபாத் சென்று கொண்டிருந்தேன். அப்போது உதய்பூர் தேசிய நெடுஞ்சாலையில் மிகக் கொடிய விபத்தில் மாட்டிக் கொண்டேன்.

ஆனால் அதிர்ஷ்டவசமாக எங்களுக்கு எதுவும் நேரவில்லை. நாங்கள் நலமாக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!