வாய்ப்பு தருவதாக கூறி என்னை தனியாக ஹோட்டலுக்கு அழைத்தார்கள்..!! பிரபல நடிகை உருக்கம்..!!


பிரபல தெலுங்கு நடிகை ஆமணி. இவர் தமிழில் விஜயகாந்த் நடித்த ஹானஸ்ட் ராஜ், எங்கிருந்தோ வந்தான் போன்ற படங்களில் நடித்தவர்.

இவர் தற்போது சினிமா துறையில் படவாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது பற்றி பேசியுள்ளார். அவர் சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலத்தில் சில தயாரிப்பாளர்கள் தனியாக ஹோட்டலுக்கு வரும்படி அழைப்பார்களாம். சின்ன நிறுவனங்கள் தான் இப்படி செய்கின்றன, முன்னணியில் இருக்கும் இயக்குனர்கள், தயாரிப்பு நிறுவனங்கள் இப்படி செய்வதில்லை என மேலும் அவர் கூறியுள்ளார்.

சமீபத்தில் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி casting couch பற்றி பேசியதோடு மட்டுமல்லாமல் பல முன்னணி பிரபலங்களையும் சர்ச்சையில் சிக்க வைத்தார். அவரை தொடர்ந்து பல நடிகைகள் இது பற்றி வெளிப்படையாக பேசி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!