நடிகை சனாவின் தாய் காலமானார்..!! ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கும் திரையுலகினர்..!!


‘ராஜபாட்டை’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சனா. விக்ரம் நடித்த இந்தப் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் சனா நடித்திருந்தார். இப்படம் இவருக்கும் சிறந்த அடையாளத்தை கொடுத்தது.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.


குறிப்பாக தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது சின்னத்திரையில் பிசியாக நடித்து வருகிறார்.

இவரது தாய் இன்று உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இவருடைய மறைவுக்கு திரையுலகினர் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!