தளபதியின் மெர்சல் படத்தை விமர்சித்த பிரபல நடிகை…!! கடுப்பில் ரசிகர்கள்..!!


விஜய்யின் மெர்சல் படம் தான் தமிழ் சினிமாவில் மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம். வசூலில் மாஸ் காட்டி வரும் இப்படத்தை பிரபலங்களும் அமோகமாக பாராட்டினர்.

விஜய்யுடன் தெறி படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்திருந்தவர் நடிகை ராதிகா. இவர் தற்போது இப்படை வெல்லும் என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ராதிகா பேசும்போது, ஒரு படம் எப்படி, அதில் எவ்வளவு வேலைகள் இருக்கிறது என்பதையெல்லாம் விமர்சகர்கள் உண்மையாக சொல்ல வேண்டும்.


சும்மா இந்த படம் ரூ. 200 கோடி, ரூ. 300 கோடி என்று சொல்வதில் எல்லாம் எந்த பெருமையும் கிடையாது, என்ன உண்மையோ அதை தெளிவாக சொல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். இவரின் இந்த பேச்சு அண்மையில் வசூலில் மாஸ் காட்டி வரும் மெர்சல் பட வசூலை குறித்து தான் அவர் கூறியுள்ளாரா என்று பலர் பேசி வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#