அட.. இவருக்கா இப்படியொரு மார்க்கெட்..? செம்ம பிஸியாக இருக்கும் பிரபல காமெடி நடிகர்..!!


தமிழ் சினிமாவில், இவருக்கு இப்படியொரு மார்க்கெட் கிடைக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவே இல்லை எனும் அளவிற்கு எப்போதும் பிஸியாக இருக்கிறார் காமெடி நடிகர் யோகி பாபு.

தமிழ் சினிமாவில் காமெடிக்கு என்று ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு காமெடி நடிகர் வந்து செல்கின்றனர். கவுண்டமனி – செந்திலுக்குப் பிறகு விவேக், வடிவேலு என்று காமெடி நடிகர்களின் லிஸ்ட் நீண்டுகொண்டே செல்கிறது. வடிவேலுவைத் தொடர்ந்து ஒரு காலத்தில் சந்தானத்திற்கு மார்க்கெட் இருந்தது. ஹீரோவாக சென்ற அவருக்கு இப்போது மார்க்கெட் இல்லை. இந்த காமெடி லிஸ்டில், தற்போது சூரி இடம் பெற்றுள்ளார். இவரைத் தொடர்ந்து இந்த லிஸ்டில் யோகி பாபு இணைந்துள்ளார். இவரது ரைமிங் காமெடிகளும், பஞ்ச வசனனும் தமிழ் சினிமா ரசிகனின் லேட்டஸ் வைரல். அந்த வகையில், கோலிவுட்டில் முன்னணி மாஸ் ஹீரோக்களுடன் இணைந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

நெல்சன் இயக்கத்தில் வெளியாக இருக்கும் கோலமாவு கோகிலா படத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவை காதலிப்பது போன்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் வரும் கல்யாண வயசு என்ற பாடலில் நயன்தாராவை உருகி உருகி காதலிப்பது போன்ற கதாபாத்திரம் இணையத்தில் வைரலாகியது. இந்த மகிழ்ச்சியில் இருக்கும் யோகி பாபு, அதனைக் கொண்டாடக் கூட முடியாமல், சென்னைக்கும் ஹைதராபாத்துக்கும் பறந்து கொண்டிருக்கிறார். இந்தப் படங்கள் மட்டுமல்லாமல், சிவகார்த்திகேயன் நடித்து வரும் 2 படங்களிலும் யோகி பாபு நடிக்கிறார். ரவிக்குமார் இயக்கத்தில் சயின்ஸ் பிக்‌ஷன் படம் மற்றும் ராஜேஷ் எம் இயக்கத்தில் உருவாகி வரும் காமெடி படம் என்று இரு படங்களிலும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்கயிருக்கிறார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!