விஜய் அவார்ட்ஸில் ‘மெர்சல்’ திரைப்படத்துக்கு எத்தனை விருதுகள் தெரியுமா..?


பல சர்ச்சைகளுக்கு மத்தியில் மாபெரும் வெற்றி பெற்ற மெர்சல் திரைப்படத்துக்கு ‘விஜய் அவார்ட்ஸில் மூன்று விருதுகள் கிடைத்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற மெர்சல் திரைப்படம் விஜய் அவார்ட்ஸ்-ல் 3 விருதுகளை தட்டி சென்றதாக தகவல் கசிந்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் விஜய் டிவி, விஜய் அவார்ட்ஸ் விருது வழங்கி திரைப்பட கலைஞர்களை கௌரவித்து வருகிறது. இந்த விருதானது சிறந்த திரைப்படம், இயக்குநர், நடிகர், நடிகை உள்ளிட்ட பல விருதுகள் அந்த ஆண்டு வெளியான திரைப்படத்தின் கணக்கெடுப்பின்படி வழங்கப்படும்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு நடக்க வேண்டிய விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சி தூத்துக்குடி துப்பாக்கி சூட்டு சம்பவத்தால் நிகழ்ச்சியை ஒத்தி வைத்து, அதற்கு அந்த தொலைக்காட்சி வருத்தமும் தெரிவித்தது.

இந்நிலையில் நேற்று(ஜூன் -3)ம் தேதி இந்த நிகழ்ச்சி வெகு விமர்சியாக நடந்துள்ளது. இதில் நடிகர் விஜய்சேதுபதி விக்ரம் வேதா படத்துக்காக சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றிருக்கிறார் எனவும். நடிகை நயன்தாரா சிறந்த நடிகை மற்றும் பிடித்தமான நடிகை ஆகிய இரண்டு விருதுகளைப் பெற்றிருக்கிறார் என தகவல் கசிந்துள்ளது.

அதேபோல் கடந்த ஆண்டு வெளியான மெர்சல் திரைப்படம் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் பிரமாண்ட வெற்றி பெற்றது. இந்த படத்திற்கு விருதுகளும், புகழும் குவிந்து வரும் நிலையில், தற்போது விஜய் அவார்ட்ஸ்-லும் மெர்சல் திரைப்படத்துக்கு, சிறந்த திரைப்படத்துகான விருதும், மெர்சல் திரைப்படத்தின் இயக்குநர் அட்லிக்கு சிறந்த இயக்குநருக்கான விருதும். மற்றும் மெர்சல் திரைப்படத்தின் இடம்பெற்ற ஆளப்போறான் தமிழன் என்ற பாடலுக்கு சிறந்த பாடலுக்கான விருதும் வழங்கப்பட்டதாக தகவல் கசிந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!