காதல் மன்னன் ஜெமினி கணேசனால் வாழ்க்கையை தொலைத்த நடிகைகள்..!! யார் யார் தெரியுமா..?


ரேகாவை ஒரு வெற்றிகரமான நடிகையாக தெரிந்த பலருக்கும். சிறு வயதில் அவர் கடந்து வந்த கடினமான வாழ்க்கை பற்றி தெரியாது. ஜெமினி கணேஷன் ஒரு காதல் மன்னன். முதலில் அலமேலு, பிறகு புஷ்பவல்லி… அதன் பின் சாவித்திரி என மூன்று திருமணம் செய்தவர்.

இதில் புஷ்பவல்லியுடனான இரண்டாம் திருமணமானது நீண்ட காலம் ரகசிய உறவாக மட்டுமே இருந்தது. புஷ்பவல்லி மூலம் பிறந்த மகள்களுக்கு சமூகத்தில் ஜெமினி கணேசனின் வாரிசுகள் என்ற அடையாளம் பெற சில காலம் காத்திருக்க வேண்டி இருந்தது.

சாவித்திரிக்கு ஜெமினி கணேஷன் மூலம் கிடைத்த அடையாளம், புஷ்பவல்லிக்கு மட்டுமல்ல அவரது குழந்தைகளுக்கும் கிடைக்கவில்லை. அப்பா பெயர் தெரியாதது ஒரு வலி என்றால். அப்பா யார் என்று தெரிந்தும், அவரை தனது அப்பா என்று கூறிக் கொள்ள முடியாத நிலை மிகவும் கொடியது. அப்படியான வலியை தாண்டி வந்தவர் தான் நடிகை ரேகா….


இரகசிய திருமணம்!
ஏற்கனவே திருமணமான ஜெமினி கணேஷன் புஷ்பவல்லி எனும் அழகான நடிகை மீது 1947ல் உருவாகி வந்த மிஸ் மாலினி என்ற திரைப்படத்தின் போது காதலில் விழுந்தார். ஒரு சில சந்திப்புக்கு பிறகு இவர்கள் இருவரும் ஆழமான காதலில் இணைந்தனர். தனது குடும்பத்தை எதிர்கொள்ள தயக்கம் கொண்டிருந்த ஜெமினி கணேஷன் புஷ்பவல்லியை திருப்பதியில் வைத்து இரகசியமாக திருமணம் செய்துக் கொண்டார்.

தந்தையற்ற நிலை…
தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டார் நடிகரின் மகள். லட்சோப லட்ச இரசிகர்கள் கொண்ட நடிகருக்கு மகளாக பிறந்தும் தந்தை இல்லாத நிலையில் தான் வளர்ந்தார் ரேகா.

ஜெமினி – புஷ்பவல்லி தம்பதிக்கு பிறந்த பிள்ளைகளில் மூத்தவர் ரேகா. ஒரு ஸ்டார் குழந்தையாக வளர அனைத்து தகுதிகளும், உரிமைகளும் இருந்தும்… ஜெமினி – புஷ்பவல்லி சிறிது காலத்தில் பிரிந்ததால் தந்தையின் அன்பும், அரவனைப்பும் இல்லாமலேயே வளர்ந்தார் ரேகா.

ஜெமினி கணேஷன் சில காலம் புஷ்பவல்லி மூலம் பிறந்த பிள்ளைகளை தனது பிள்ளைகளாக காட்டிக் கொள்ளவில்லை என்று சில புரளி செய்திகள் மூலம் அறியவருகிறது.

புஷ்பவல்லி!
தனி ஆளாக நின்று தனது பிள்ளைகளை சந்தோஷம் குறையாமல் வளர்த்தார் புஷ்பவல்லி. அம்மாவாகவும், அப்பாவாகவும் அவரே இருந்தார். ரேகா தனது அம்மாவுடன் மிகவும் செல்லமாக இருந்தார். இதே காரணத்தால் ரேகா தனிமையை அதிகம் விரும்பும் நபராக மாறினார். தனக்கான தனி உலகை அவர் வடிவமைத்துக் கொண்டார்.


தனிமை!
ரேகாவிற்கு அப்போது பத்து வயது தான் இருக்கும். அப்போது அவரது தந்தையான ஜெமினி கணேஷன் மற்றொரு தென்னிந்திய சூப்பர் ஸ்டார் நடிகையான சாவித்திரியுடன் நெருக்கமாக இருந்தார். அவரையும் இரகசியமாக திருமணம் செய்துக் கொண்டார்.

இந்த செய்தி ரேகாவிற்கு சோகத்தை அளித்தது. இதனால், ரேகா ஒரு பெண்ணாக மட்டுமின்றி, ஒரு ஆணாகவும் வளர ஆசைப்பட்டார். தனது சொந்த காலில் நிற்க வேண்டும் என்ற உறுதியுடன் இருந்தார். பள்ளிக் காலத்தில் ரேகாவிற்கு பெரிய நண்பர் கூட்டம் எல்லாம் இல்லை.
உடல்நலம்!

60களில் ஜெமினி – சாவித்திரி ஜோடி திரையில் வெற்றிக்கரமான நட்சத்திரங்களாக உலா வந்தனர். இதே காலக்கட்டத்தில் தான் ரேகாவின் தாயார் புஷ்பவல்லி உடல்நலம் குன்றி போனார். தனது குழந்தைகளை வளர்க்க அவரால் அதன் பிறகு உழைக்க முடியாமல் போனது.

குடும்பத்தின் மூத்த மகள் என்ற பொறுப்பு ரேகாவிற்கு இருந்தது. அதனால் தனது 14 வயதிலேயே பள்ளி படிப்பை முடித்து கொண்ட ரேகா. குடும்பத்திற்காக பொருளாதார சுமையை சுமக்க தயாரானார்.


கட்டாய நடிப்பு!
ரேகாவிற்கு நடிப்பு கொஞ்சம் அசௌகரியமாக இருந்தது ஆரம்ப நாட்களில். ஆனால், குடும்பத்தை காப்பாற்ற தனது பெற்றோரின் கால் தடங்களை பின்பற்றுவதை தவிர ரேகாவிற்கு வேறு வழியில்லை. அவரது சூழ்நிலையும் அவரை நடிகையாக்க தான் திட்டமிட்டது.

சினிமா எனும் பெரிய உலகினுள் விருப்பமின்று தான் நுழைந்தார் ரேகா. சினிமா கொஞ்சம் மோசமானது தான். அதை தனது வாழ்நாளில் சிறுவயது முதலே அறிந்தவர் ரேகா.

தடுமாற்றம்!
நட்சத்திர குழந்தைகள் என்றால் அறிமுகம் தேடி வரும். ஒரே நேரத்தில் பத்து கதைகள் வந்து குவியும். தயாரிப்பாளர்கள் அறிமுகம் செய்ய முன்வருவார்கள். ஆனால், ரேகாவிற்கு அப்படி இல்லை. தென்னிந்திய சினிமாவில் நுழைந்து… பிறகு இந்தி சினிமாவிற்கு சென்றார் ரேகா. அப்போது அவர் பதின்வயதில் நடைப்போட்டுக் கொண்டிருந்தார்.

இந்தி சினிமாவில் நுழைந்த போது ரேகாவிற்கு சரியாக இந்தி பேச வராது. உடன் பணிபுரியும் நபர்களோடு பேச கடினமாக உணர்ந்தார். துவக்கத்தில் ரேகாவை இந்தி சினிமா ஏற்றுக் கொள்ளவில்லை. அவரது அழகை குறை கூறினார்கள். ஆனால், சவான் பாடான் படத்தின் வெற்றி மூலம் ஒரு நடிகையாக தன்னை நிலைநாட்டிக் கொண்டார் ரேகா.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!