நம்ம மக்களுக்கு யார் நல்லது பண்ணுவாங்க..? விரைவில் அரசியலுக்கு வாறேன்..!! ஜூலி அதிரடி


பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் மக்களிடையே பிரபலமான ஜூலி, தானும் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஜுலி, தனக்கு கிடைத்த எதிர்மறை விமர்சனங்களையே தன்னுடைய பப்ளிசிட்டியாக வைத்து மீடியாக்களில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தனியார் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் ஜூலி, விளம்பர படம், சினிமா படங்களிலும் நடிக்க ஆரம்பித்து விட்டார். மீம் கிரியேட்டர்கள் இவரை கலாய்த்து எவ்வளவு மீம்ஸ்கள் போட்டு, கேலி செய்தாலும் அதை இவர் கண்டபாடில்லை.


இந்த நிலையில் ஜூலி தானும் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்துள்ளது தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் வெளியிட்ட வீடியோவில் ”ரஜினி அரசியலுக்கு வருவாரா.? மாட்டாரா? கமல் ஆட்சியை பிடிப்பாரா? மாட்டாரா? ஆர். ஜே பாலாஜி அரசியலுக்கு வந்து என்ன பண்ணுவாரு? ஆனா நம்ம மக்களுக்கு யார் நல்லது பண்ணுவாங்க. நானும் கூடிய விரைவில் அரசியலுக்கு வறேன். நாம் அனைவரும் ஒன்றாக வெற்றி பெறுவோம்” இவ்வாறு ஜூலி அந்த விடியோவில் பேசியிருக்கிறார்.

நடிகை ஜூலியின் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஒருவேளை இது ஏதாவது படத்திற்கான விளம்பர யுக்தியாக கூட இருக்கலாம் என தமிழ் சினிமா ரசிகர்கள் கூறி வருகின்றனர்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!