பெரிய முதலாளி வீட்டு நாயகியுடன் காதலில் சிக்கிய வாரிசு நடிகர்..!!


பிரபல தொலைக்காட்சி ஒன்று சமீபத்தில் நடத்திய பெரிய வீட்டு நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற மிளகா நாயகிக்கு, சினிமாவில் அவ்வளவாக வாய்ப்பு இல்லையாம். அவ்வப்போது ஒருசில படங்களில் நடித்து வருகிறாராம்.

நாயகி நடிப்பில் இரவு படம் ஒன்றும் விரைவில் ரிலீசாக இருக்கிறதாம். இந்த நிலையில், நாயகிக்கும், மறைந்த திலகம் நடிகரின் முதல் மகனின் பேரனுக்கும் காதல் ஏற்பட்டுள்ளதாம். இவர் ஏற்கனவே ஒரு படத்தில் நாயகனாக நடித்துள்ளாராம். அந்த படம் போதிய வரவேற்பை பெறவில்லையாம்.

நாயனும், நாயகியும் சமீப காலமாகவே ஒன்றாக ஊர்சுற்றி வருவதாகவும், விரைவில் திருமணம் செய்யவிருப்பதாகவும் கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!