அம்மாடியோவ்… ஐஸ்வர்யாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா..? தலையே சுத்திருச்சு போங்க..!!


புதிதாக திருமணம் ஆன கோஹ்லி மற்றும் அனுஷ்கா ஜோடியை மிஞ்சியுள்ளனர் ஐஸ்வர்யா- அபிஷேக் பச்சன் ஜோடி.

சமீபத்தில் திருமணமான கோஹ்லி- அனுஷ்கா ஜோடி மும்பை, Worli-யில் உள்ள தங்களது பிரம்மாண்ட வீட்டின் புகைப்படங்களை இணையத்தில் தெறிக்க விட்டு வைரல் ஆகியது நினைவிருக்கலாம்.

அதே போல 2015ல் 5,500 சதுர அடியில் ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோரால் வாங்கப்பட்ட ஒரு வீடு தற்போது பிரபலம் ஆகியிருக்கிறது, இதன் விலை 21 கோடி ரூபாயாம்.

இந்த வீடு Bandra-Kurla வளாகத்தில் உள்ள உயர்தர குடியிருப்பான Signia Isles பகுதியில் அமைந்துள்ளது.

ஐஸ்வர்யா மற்றும் அபிஷேக் பச்சனால் வாங்கப்பட்ட பல சொத்துக்களில் இதுவும் ஒன்றாகும்.

இது மட்டுமன்றி Skylark Towers-ன் 37வது மாடியில் உள்ள ஒரு வீடு, துபாயில் உள்ள ஒரு பிரம்மாண்ட அரண்மனை, மற்றும் அவர்களது பாரம்பர்ய குடும்ப வீடுகளான Jalsa மற்றும் Prateeksha போன்றவை அபிஷேக்- ஐஸ்வர்யா ஜோடியின் சொத்துக்கள்.

தற்போது பாந்த்ரா வீட்டின் உள் அலங்காரத்தில் அபிஷேக்- ஐஸ்வர்யா ஜோடி கவனம் செலுத்த போவதால் இந்த வீட்டின் படங்கள் வெளியே வந்து இணையத்தில் கலக்கி கொண்டிருக்கின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!