ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் வீட்டில் டும் டும்..!! குவியும் வாழ்த்துக்கள்..!!


காதல் சொல்ல வந்தேன் படத்தில் சந்தியாவாக நடித்த நடிகை மேக்னாவிற்கும் ஆக்க்ஷன் கிங் அர்ஜுனின் அண்ணன் மகன் . சிரஞ்சீவி சார்ஜாவுக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது,

தமிழ் சினிமாவில் ‘காதல் சொல்ல வந்தேன்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மேக்னா ராஜ்.
இவர் இப்படத்தைத் தொடர்ந்து தமிழில் உயர்திரு 420, நந்தா நந்திதா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

மேலும் இப்படங்களைத் தவிர கன்னடம் மற்றும் மலையாளப் படங்களில் அதிக கவனம் செலுத்தி வந்த மேக்னாவும் 10 ஆண்டுகளாக நண்பர்களாக இருந்த கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவும்,கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.


இதையடுத்து,திருமணம் செய்ய முடிவெடுத்த அவர்களுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் 22ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
அதன்படி சிரஞ்சீவி சார்ஜாவும், நடிகை மேக்னா ராஜ்ஜூம் இரு முறைபடியும் திருமணம் செய்து கொண்டனர்.

முதலில் கடந்த ஏப்ரல் 30ம் தேதி கிறிஸ்துவ முறைப்படியும், மே 2ம் தேதி நேற்று இந்து முறைப்படியும் பெங்களூரில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.


இந்த திருமண நிகழ்ச்சியில் ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளார்.

மேலும் பெங்களூரில் நடந்த திருமண நிகழ்ச்சியில், சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!