சூப்பர் ஸ்டாரை கடுமையாக விமர்சனம் செய்து கருத்து வெளியிட்ட பாரதிராஜா..!!


நடிகர் ரஜினிகாந்த் மீது இயக்குநர் பாரதிராஜா கடுமையாக விமர்சனம் செய்து கருத்து வெளியிட்டு உள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி ஐபிஎல் போட்டிக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் போலீசார் தாக்கப்பட்டதற்கு ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்து இருந்தார். ரஜினிகாந்தின் சமூக வலைதள பதிவுக்கு, இயக்குநர் பாரதிராஜா பதில். அளித்து உள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

காவிரிக்காக ஒன்றுகூடிய தமிழர் ஒற்றுமை உணர்வை வன்முறை கலாசாரம் என கூறுவது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக நீங்கள் என்ன செய்தீர்கள்?; அறவழியில் போராடியவர்கள் வன்முறையாளர்களா?

தமிழர்கள் எல்லாம் ஒன்றிணைந்து விட்டார்கள் என்ற காழ்ப்புணர்ச்சியால் பேசும் பேச்சு இது. ரஜினிகாந்த் தமிழர் அல்ல, கர்நாடகா காவியின் தூதுவர் என்று இப்போது தான் தெரிகிறது.

இலங்கை தமிழர், நியூட்ரினோ மற்றும் மீத்தேன் விவகாரம் குறித்து ரஜினி வாய்திறக்காதது ஏன்?


தமிழர்களுள் ரஜினிகாந்த் சிண்டு முடிய வேண்டாம்.

நியூட்ரினோவுக்கு எதிராக களத்தில் போராடினீர்களா? மீத்தேன் பற்றி வாய் திறந்தீர்களா? இலங்கை தமிழர்களை கொன்று குவித்தபோது குரல் கொடுத்தீர்களா?:

படம் வெளியாகும் போது மட்டும் பூச்சாண்டி காட்டும் ரஜினி போன்றோரை சந்தித்ததே இல்லை.

காவிரி பிரச்சினை பற்றி எரிந்தபோது, வெந்து செத்தது எங்கள் தமிழ் இனம்.

தமிழன் பணத்தில் ராஜவாழ்க்கை வாழ்ந்து கொண்டு தமிழர்களை வன்முறையாளர்கள் என்கிறீர்கள்.

உங்கள் வேஷம் மெல்ல மெல்ல கலைகிறது என ரஜினிகாந்த் குறித்து இயக்குநர் பாரதிராஜா விமர்சனம் செய்து உள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி