பிரபல நடிகைக்கு கணவராகும் திரைப்பிரபலம்..!! அவர் யார் தெரியுமா..?


தும்ஹரி சூலு என்ற பாலிவுட் படத்தின் தமிழ் ரீமேக் நடிக்கும் ஜோதிகாவுக்கு கணவராக மைனா புகழ் விதார்த் நடிக்கவுள்ளார்.

வித்பாலன் நடிப்பில் வெளியான ஹிட் படம் தும்ஹரி சூலு. இப்படம் தற்போது தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. இதில் வித்யா பாலன் ரோலில் நடிகை ஜோதிகா நடிக்கிறார். இப்படத்தை ராதா மோகன் இயக்குகிறார். இந்த நிலையில், இப்படத்தில் நடிக்கும் ஜோதிகாவிற்கு கணவராக நடிகர் விதார்த் முதன் முறையாக நடிக்கவுள்ளார்.

சினிமாவில் தொடர்ந்து போராடி வரும் விதார்த்திற்கு எந்த படமும் நல்ல ஹிட் கொடுக்கவில்லை. எனினும், இப்படம் அவருக்கு கை கொடுக்கும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறார்.

இப்படம் தொடர்பாக இயக்குனர் ராதா மோகன் கூறுகையில், எப்போதும் போன்று இது ஹீரோ ரோல் கிடையாது. இப்படத்திற்குரிய ஹீரோவை தேடினோம். அப்போது, தான் இளம் நடிகர்களில் விதார்த் தான் இப்படத்தின் கதாபாத்திரத்திற்கு சரியானவர் என்று தேர்வு செய்துள்ளோம் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற நடிகர்களைப் போன்று ஹீரோ ரோலுக்கு மட்டும் நடிப்பேன் என்று அடம் பிடிக்காமல், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பதற்கும் ஒப்புக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி