எதற்காக அப்படி செய்கின்றார்கள் தெரியுமா..? தமன்னா கூறிய தகவலால் கோலிவுட்டில் பரபரப்பு..!!


நடிகை தமன்னா. சினிமாவிற்கு வந்து கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் ஆகிவிட்டது. அஜித், விஜய் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்தாகி விட்டது. திரிஷா, அனுஷ்கா என எவருக்கும் போட்டியாக இல்லாமல் தனக்கென ஒரு பாதை அமைத்து அதில் வெற்றியும் கண்டவர். சர்ச்சைகள் இவர் இருக்கும் திசையை கூட எட்டிப்பார்த்தது கிடையாது. அன்பாக பழகக்கூடியவர். அமைதியானவரும் கூட.

சமீபத்தில் “ஸ்கெட்ச்” திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வரவேற்ப்பை பெற்றது. இதனை தொடர்ந்து, சமீபத்தில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் அவர் கூறியுள்ளதாவது, ” எந்த படமாக இருந்தாலும் சரி, சில நடிகைகள் மாடர்னாகவும், கவர்ச்சியாகவும் ஆடை அணிய செய்கிறார்கள். அது தவறு, படத்தின் கதைக்கும் ஏற்றதாக இருக்க வேண்டும்.

அதே சமயம் அவர்களது உடல் வாகிற்கும் ஏற்றவாறு ட்ரெஸ் போட வேண்டும். அப்போது தான் அவர்கள் கச்சிதமாக அந்த கதாபாத்திரத்திற்கு பொருந்துவார்கள் என்பது எனது கருத்து. எல்லாவற்றிக்கும் மேல், அப்போது தான் அவர்களுக்குள் ஒரு தன்னம்பிக்கை பிறக்கும்என கூறியுள்ளார்.

தற்போது, ஹிந்தியில் வெளியாகி சக்கை போடு போட்ட குயின் ரீமேக் படத்தில் நடித்துவரும் இவர். தொடர்ந்து கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் பரபரப்பாக.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி