பிக்பாஸ் ஜோடிகளின் அசர வைக்கும் நடிப்பால் வியந்துபோன பாலிவுட்..!! எதற்காக தெரியுமா..?


யுவன் சங்கர் ராஜா, கே புரொடக்‌ஷன்ஸ் ராஜ ராஜன் இணைந்து தயாரித்து வரும் படம் ‘பியார் பிரேமா காதல்’. இதில் ஹரிஷ் கல்யாண் நாயகனாகவும், ரைசா நாயகியாகவும் நடித்து வருகிறார்கள். இப்படத்தை இளம் இயக்குனர் இலன் இயக்கி வருகிறார்.


விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்தப் படத்தின் மாற்று மொழி உரிமையை வாங்க பெரும் போட்டாப் போட்டி நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. பிரபல ஹிந்தி பட தயாரிப்பு நிறுவனங்கள் இந்த படத்தின் இந்தி உரிமைக்காக தயாராகி கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது.


காதலுக்கு மொழி அவசியமில்லை. காதலை பற்றிய படங்களுக்கும் மொழி அவசியமில்லை. “High on Love” என்று துவங்கும் ஒரு பாடல் ஏற்கனவே வெளிவந்து சமூக வலைதளங்களில் பெரும் ஹிட் ஆனதின் பிரதிபலன் இது. இறுதி கட்ட படப்பிடிப்பில் இருப்பதால், இந்தி ஆக்கத்தை பற்றிய விவரங்கள் தெரிவிப்பதற்கு இன்னமும் அவகாசம் தேவை என்கிறார் இயக்குனர் இலன்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி