அவர்தான் என்னுடைய புருஷன்..!! பிரபல நடிகரின் வீட்டில் பெண்ணின் ரகளையால் அதிர்ச்சி..!!


பல காலமாக சிங்கிளாகவே உள்ளார் பாலிவுட் நடிகர் சல்மான் கான். அவர் வாழ்வில் காதலிகள் வருவதும் போவதுமாக உள்ளனர். எந்த காதலும் நிலைத்து திருமணத்தில் முடியவில்லை.

தற்போது அவர் நடிகை லூலியா வந்தூரை காதலிக்கிறார் என்று கூறப்படுகிறது.

லூலியாவை விட்டுவிட்டு முன்னாள் காதலியான நடிகை கத்ரீனா கைஃபிடமே திரும்பிச் சென்றுவிட்டார் சல்மான் என்றும் பேச்சு உள்ளது.


தனது காதலர் ரன்பிர் கபூரை பிரிந்த கத்ரீனாவும் சல்மானுடன் நெருக்கம் காட்டி வருகிறார்.

சல்மான் கானின் தீவிர ரசிகை ஒருவர் மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள அவரது வீட்டிற்குள் நுழைந்து ரகளையில் ஈடுபட்டுள்ளார். சல்மான் தனது கணவர் என்று மீண்டும் மீண்டும் தெரிவித்துள்ளார்.

ரசிகை அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்தபோது போலீசாருக்கு தகவல் சொல்வதற்கு பதில் தீயணைப்பு துறைக்கு போன் செய்துள்ளனர்.


ஒரு வழியாக அந்த ரசிகையை அங்கிருந்து வெளியேற்றிவிட்டனர்.

சல்மான் கான் தற்போது ரேஸ் 3 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். படப்பிடிப்பு அபுதாபியில் நடந்து வருகிறது. ரசிகை ரகளை செய்தபோது சல்மான் வீட்டில் இல்லை.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி