தலயின் அடுத்த படத்தை இயக்க போவது இவரா..? அப்படினா சிவா இல்லையா..?

அஜித்தின் விவேகம் படம் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக வெளியாகி பக்கா மாஸ் கலெக்ஷன் பெற்றது.

ஹாலிவுட் தரத்தில் தயாராகி இருந்த இப்படத்தில் அஜித் உடலமைப்பை குறைத்து மிகவும் பிட்டாக இருந்தார்.


இப்படத்தை தொடர்ந்து அஜித் யாருடன் இணைவார் என்று ரசிகர்களிடம் பெரிய கேள்வி உள்ளது.

இந்த நிலையில் இயக்குனர் சிவா, புஷ்கர்-காயத்ரி போன்றோரின் பெயர்கள் அடிபட்டது.

தற்போது புஷ்கர்-காயத்ரி இதுகுறித்து விளக்கம் கொடுத்துள்ளனர். விக்ரம் வேதா படத்தை அடுத்து கதையை தயார் செய்து வருகிறோம்.


கதை முழுவதும் முடிந்த பிறகு தான் கதைக்கான நாயகர்களை தேடும் பணியில் ஈடுபட வேண்டும், எங்களது வழக்கம் அதுதான்.

இன்னும் கதையே தயாராகாத நிலையில் அஜித்தை வைத்து படம் இயக்குவதாக வந்த தகவல்கள் உண்மையில்லை என கூறியுள்ளனர்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!